Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

பிலிப்பீன்ஸில் நிலச்சரிவு - குறைந்தது 27 பேர் மரணம்

வாசிப்புநேரம் -

பிலிப்பீன்ஸின் (Philippines) மத்திய, தெற்குப் பகுதிகளில் ஏற்பட்டுள்ள நிலச்சரிவுகளினாலும் வெள்ளத்தாலும் குறைந்தது 27 பேர் மாண்டனர். 

சிலரை இன்னமும் காணவில்லை.
கடும்புயலால் கனத்த மழை பெய்ததில் வெள்ளம் பெருக்கெடுத்தது.

மணிக்குத் 90 கிலோமிட்டர் வேகத்தில் காற்று வீசியதாகக் கூறப்பட்டது.

மோசமாகப் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஒன்று லேடே (Leyte)  மாநிலம். அங்கு ஏற்பட்ட நிலச்சரிவுகளில் 21 கிராமவாசிகள் மாண்டனர்.

17,000க்கும் அதிகமானோர் வீடுகளிலிருந்து பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

புயலின் தீவிரம் இன்று (12 ஏப்ரல்) குறையும் என்று வானிலை ஆய்வகம் முன்னுரைத்துள்ளது.

செய்தி செயலி பல்வேறு புதிய அம்சங்களுடன் புதுப்பொலிவு பெற்றுள்ளது.  இப்போதே ‘Update’ செய்யுங்கள் அல்லது ‘Mediacorp Seithi’ செயலியைப் பதிவிறக்கம் செய்யுங்கள்! 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்