Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

'பிலிப்பீன்ஸ் தேர்தலில் முறைகேடு நடந்தது' - மக்கள் ஆர்ப்பாட்டாம்

வாசிப்புநேரம் -

பிலிப்பீன்ஸ் தேர்தலில் வாக்குகள் எண்ணப்பட்டதில் முறைகேடு நடந்துள்ளதாகக்கூறி மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

புதிய அதிபராக ஃபெர்டினண்ட் மார்க்கோஸ் ஜூனியர் (Ferdinand Marcos Junior) 31 மில்லியனுக்கும் மேற்பட்ட வாக்குகளைப் பெற்று வெற்றியடைந்ததைத் தொடர்ந்து அந்த அதிருப்தி நிலவுகிறது.

தலைநகர் மணிலாவில் உள்ள தேர்தல் பிரசார நிலையத்தை நோக்கி நூற்றுக்கணக்கானோர் பேரணி நடத்தினர்.

வாக்களிப்புத் தினத்தன்று நூற்றுக்கணக்கான வாக்கு எண்ணும் இயந்திரங்கள் பழுதாகியிருந்ததை அவர்கள் சுட்டினர்.

இருப்பினும் வாக்குகள் எப்படி அவ்வளவு விரைவாகக் கணக்கிடப்பட்டன என்று ஆர்ப்பாட்டாளர்கள் கேள்வியெழுப்பினர்.

வாக்குகள் கள்ளத்தனமாக வாங்கப்பட்டன என்றும் தேர்தல் வேட்பாளர்கள் அளவுக்கு அதிகமாகச் செலவு செய்ததாகவும் அறிக்கைகள் வெளியாகியிருக்கின்றன.

தேர்தலில் மோசடி நடந்ததாக எந்த ஆதாரமும் இல்லை என்று தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நேரடியாகக் கணக்கிடப்பட்ட வாக்குகளுக்கும் அதிகாரபூர்வமற்ற வாக்கு எண்ணிக்கைக்கும் இடையே எந்த முரண்பாடும் இல்லை என்று உள்ளூர்க் கண்கானிப்பு அமைப்பு தெரிவித்தது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்