Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

"சிங்கப்பூரும் மலேசியாவும் சவால்களை இணைந்து சமாளிக்கவேண்டும்" திரு அன்வாருக்கு வாழ்த்துத் தெரிவித்தார் பிரதமர் லீ

வாசிப்புநேரம் -
"சிங்கப்பூரும் மலேசியாவும் சவால்களை இணைந்து சமாளிக்கவேண்டும்" திரு அன்வாருக்கு வாழ்த்துத் தெரிவித்தார் பிரதமர் லீ

படம்: Today

மலேசியாவின் புதிய பிரதமராகப் பொறுப்பேற்றுள்ள திரு. அன்வார் இப்ராஹிமுக்குப் பிரதமர் லீ சியென் லூங் தமது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொண்டுள்ளார். சிங்கப்பூரின் வெளியுறவு அமைச்சு வெளியிட்ட அறிக்கை அதனைத் தெரிவித்தது. 

திரு. அன்வாருக்கு எழுதிய கடிதத்தில் பக்கத்தான் ஹராப்பான் பொதுத் தேர்தலில் சிறப்பாகச் செய்துள்ளதைத் திரு. லீ பாராட்டினார்.

வட்டார, உலகச் சூழலில் கணிசமான சவால்களுக்கு இடையே திரு. அன்வார் பொறுப்பேற்றுக்கொண்டிருப்பதாக அவர் சொன்னார்.

அணுக்கமான நட்பு நாடுகள் என்ற முறையில் சிங்கப்பூரும் மலேசியாவும் அந்தச் சவால்களை இணைந்து சமாளிக்கவேண்டும் என்றும் ஒத்துழைப்பதற்குரிய புதிய வாய்ப்புகளை ஆராய வேண்டும் என்றும் பிரதமர் லீ குறிப்பிட்டார்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்

Aa