"புருணை இளவரசரின் திருமணக் கொண்டாட்டத்தில் கலந்துகொள்வதில் பெரும் மகிழ்ச்சி" - பிரதமர் லீ
வாசிப்புநேரம் -
பிரதமர் லீ சியன் லூங் புருணை இளவரசர் அப்துல் மதீன் (Abdul Mateen), அனிஷா ரோஸ்னா (Anisha Rosnah) திருமணக் கொண்டாட்டத்தில் கலந்துகொள்வது பெரும் மகிழ்ச்சியளிப்பதாகக் கூறியுள்ளார்.
பிரதமர் லீயும் அவரின் மனைவி திருவாட்டி ஹோ சிங்கும் அரசகுடும்பத் திருமணக் கொண்டாட்டத்தில் கலந்துகொள்ள புருணை சென்றுள்ளனர்.
சுல்தான் ஹசனல் போல்க்கியா (Hassanal Bolkiah) விடுத்த அழைப்பின்பேரில் அவர்களின் பயணம் அமைகிறது.
இளம் அரச தம்பதி வாழ்க்கையில் அன்பு நிறைந்த புதிய அத்தியாயத்தைத் தொடங்குவதைக் கண்டு மகிழ்ச்சியடைவதாகத் திரு லீ Facebook பதிவில் கூறினார்.
இளவரசர் மதீனைத் தமக்குப் பல ஆண்டுகளாகத் தெரியும் என்றார் அவர்.
சுல்தான் ஹசனல் போல்கியாவுடன் கொண்டுள்ள நீண்ட நட்பையும் அவருடனான பல சந்திப்புகளையும் திரு லீ நினைவுகூர்ந்தார்.
இளவரசர் மதீன் புருணை மன்னராட்சியின் பத்தாவது வாரிசு.
அரசகுடும்பத் திருமண விழா 10 நாள் கொண்டாட்டங்களுடன் விமரிசையாக நடைபெறுகிறது.

தொடர்புடையது:
ஆதாரம் : AGENCIES