Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

இந்தியாவில் 70 ஆண்டுகளுக்குப் பிறகு பிறந்த சிறுத்தைக்குட்டிகள் மாண்டன

வாசிப்புநேரம் -
இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலத்திலுள்ள தேசியப் பூங்காவில் 2 சிறுத்தைக் குட்டிகள் மாண்டுவிட்டன. மற்றொன்று மிகவும் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாக BBC செய்தி கூறுகிறது.

ஏற்கெனவே கடந்த செவ்வாய்க்கிழமை (23 மே) ஒருகுட்டி மடிந்துவிட்டது.

இந்தியாவில் அருகிவரும் உயிரினங்களில் ஒன்றாகக் கருதப்படும் அவ்வகை சிறுத்தைக் குட்டிகள் 70 ஆண்டுகளுக்குப் பிறகு பிறந்த முதல் குட்டிகளாக இருந்தன.

கடந்த ஆண்டு (2022) ஆப்பிரிக்க நாடான நமீபியாவிலிருந்து (Namibia) இந்தியாவுக்குக் கொண்டுவரப்பட்ட பெண் சிறுத்தை அந்தக் குட்டிகளைக் கடந்த மார்ச் மாதம் ஈன்றெடுத்தது.

தாய் சிறுத்தையும் அதன் குட்டிகளும் கண்காணிப்பில் வைக்கப்பட்டன.

கடந்த செய்வாய்கிழமை (23 மே) பூங்காவில் வெப்பநிலை 47 செல்ஸியஸை எட்டியது. அதனால் குட்டிகளின் உடல் பலவீனமானது. உடலில் நீர்ச்சத்து குறைந்து அவற்றில் 2 குட்டிகள் மடிந்தன என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

எஞ்சியுள்ள ஒரு குட்டிக்குத் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுவதாக BBC செய்தி கூறுகிறது.

சிறுத்தைகளை அருகிவரும் உயிரினமாக 1952 ஆம் ஆண்டு இந்திய அரசாங்கம் பிரகடனப்படுத்தியது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்