Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

பாகிஸ்தானில் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் எதிர்ப்பு ஊர்வலத்திற்குத் தடை

வாசிப்புநேரம் -

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் திட்டமிட்டிருந்த எதிர்ப்பு ஊர்வலத்தை அந்நாட்டு அரசாங்கம் தடைசெய்துள்ளது. 

அந்த ஊர்வலம் இன்று பிற்பகல் இடம்பெறுவதாக இருந்தது.

திரு. கானின் ஆதரவாளர்களை ஒடுக்கும் நடவடிக்கையில் காவல்துறையைச் சேர்ந்த காவலர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட அடுத்த சில மணி நேரத்தில் உள்துறை அமைச்சர் ராணா சனாவுல்லா (Rana Sanaullah) ஊர்வலம் தடை செய்யப்படுவதாக அறிவித்தார். 

திரு. கானின் கட்சியைச் சேர்ந்த ஓர் அதிகாரியினுடைய வீட்டுக்குக் காவலர் சென்றிருந்தபோது அந்த அதிகாரி அவரைச் சுட்டுக்கொன்றார். 

திரு. கான் புதிதாகத் தேர்தல் நடத்தப்படவேண்டும் என்று வலியுறுத்திவருகிறார். காவலர் கொல்லப்பட்டதற்கு அவர் கண்டனம் தெரிவிக்கவில்லை. மாறாக சுட்டவரைத் தற்காத்துப் பேசினார், திரு. இம்ரான் கான். 

இன்று திட்டமிடப்பட்டிருக்கும் ஊர்வலம் நடக்கும் என்றும் அவர் உறுதிகூறினார். அந்த எதிர்ப்பு ஊர்வலத்தில் கலந்துகொள்ளுமாறு ஒரு மில்லியனுக்கும்  மேற்பட்ட தமது ஆதரவாளர்களைத் திரு. கான் கேட்டுக்கொண்டுள்ளார். 

தலைநகர்  இஸ்லாமாபாத்தைச் சேர்ந்த அதிகாரிகள் 
சாலைகளில் தடுப்புகளை ஏற்படுத்தி ஆயிரக் கணக்கான காவல் படையினரைப் பணியில் ஈடுபடுத்தியுள்ளனர்.

-AFP

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்