உலகக் கிண்ணக் காற்பந்து - கத்தாரில் தயாராக உள்ள விளையாட்டு அரங்கங்கள், அவை பற்றிய சுவையான தகவல்கள்
(படம்: AFP)
உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டி தொடங்க இன்னும் சுமார் இரு வாரங்களே உள்ளன.
போட்டிகள் முதல்முறையாகக் கத்தாரில் நடைபெறவுள்ளன.
அதற்காக 8 விளையாட்டு அரங்கங்கள் தயார்நிலையில் உள்ளன.
லுசைல் ஐகோனிக் (Lusail Iconic) விளையாட்டு அரங்கம்
கொள்ளளவு: 80,000 பேர்
லுசைல் நகரில் உள்ள இதுவே கத்தாரின் ஆகப் பெரிய விளையாட்டு அரங்கம்.
டிசம்பர் 18ஆம் தேதி நடைபெறவுள்ள இறுதி ஆட்டம் இங்கே தான் நடைபெறும்.
போட்டிகளுக்குப் பின்னர் அதைச் சமூக நடுவமாக மாற்றத் திட்டங்கள் உள்ளன.
அல் பைத் (Al-Bayt) விளையாட்டு அரங்கம்
கொள்ளளவு: 60,000
முதல் ஆட்டம் இங்கே தான் நடைபெறும்.
பெடோயின் (Bedouin) கூடாரம் போன்று கட்டப்பட்டுள்ளது.
தலைநகர் டோஹாவிலிருந்து 35 கிலோமீட்டர் தூரத்தில் அல்-கோர் நகரில் உள்ளதால், பார்வையாளர்கள் அங்கே செல்ல சிரமத்தை எதிர்நோக்கலாம் என்று கூறப்படுகிறது.
எடியூகேஷன் சிட்டி (Education City ) விளையாட்டு அரங்கம்
கொள்ளளவு: 40,000
அல்-ரய்யான் பகுதியில் உள்ள பல்கலைக்கழக வளாகங்களில் இது அமைந்திருக்கிறது.
இங்குக் காலிறுதிச் சுற்றுகளில் ஒன்று நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
போட்டிகள் நிறைவுபெற்ற பின், அதன் இருக்கைகள், வளர்ந்து வரும் நாடுகளுக்கு நன்கொடையாக வழங்கப்படும்.
அஹ்மது பின் அலி (Ahmad Bin Ali) விளையாட்டு அரங்கம்
கொள்ளளவு: 40,000
எடியூகேஷன் சிட்டிக்கு மிக அருகில் உள்ளது.
கத்தாரின் ஆக வெற்றிகரமான காற்பந்து குழுக்களில் ஒன்றாகக் கருதப்படும் அல்-ரய்யானின் அரங்கம் அது.
கலிஃபா இன்டர்னேஷனல் (Khalifa International) விளையாட்டு அரங்கம்
கொள்ளளவு: 40,000
டோஹாவில் இருக்கும் இது 1976ஆம் ஆண்டு கட்டப்பட்டது.
உலகக் கிண்ணக் காற்பந்து போட்டிகளை ஏற்று நடத்தும் வாய்ப்பு கத்தாருக்கு வழங்கப்படுவதற்கு முன்பு அந்நாட்டில் இருந்த ஒரே விளையாட்டு அரங்கம் இதுவே.
அல்-துமாமா (Al-Thumama) விளையாட்டு அரங்கம்
கொள்ளளவு: 40,000
இது டோஹாவில் உள்ள ஹமட் அனைத்துலக விமான நிலையத்திற்கு அருகே உள்ளது.
மத்திய கிழக்கில் ஆண்கள் அணியும் காஃபியா (gahfiya) என்ற பாரம்பரிய தொப்பியின் வடிவில் இது கட்டப்பட்டுள்ளது.
இங்குக் காலிறுதிச் சுற்றுகளில் ஒன்று நடைபெறும்.
விளையாட்டு அரங்கம் 974
கொள்ளளவு: 40,000
டோஹாவில் கொள்கலன்களைக் கொண்டு கட்டப்பட்டது.
போட்டிகள் முடிந்த பின்னர் இது முற்றிலும் அகற்றப்படும்.
'974' என்ற எண் கத்தாருக்கான அனைத்துலகத் தொலைப்பேசி அழைப்புக் குறியீடு.
இந்த அரங்கைக் கட்டுவதற்கும் 974 கொள்கலன்கள் பயன்படுத்தப்பட்டன.
அல்-ஜனூப் (Al-Janoub) விளையாட்டு அரங்கம்
கொள்ளளவு: 40,000
அல்-வக்ரா என்ற நகரில் இது அமைந்துள்ளது.
முத்துகள் பெறவும் மீன்பிடிக்கவும் பயன்படுத்தப்படும் பாரம்பரியப் படகுகளை மையமாக வைத்து இது வடிவமைக்கப்பட்டுள்ளது.
'FIFA உலகக் கிண்ணம் கத்தார் 2022' - 64 ஆட்டங்களையும் meWATCH தளத்தில் நேரலையில் கண்டுரசிக்கலாம்.
சந்தா, விளையாட்டுகள் குறித்த மேல் விவரங்கள் - mewatch.sg/fifaworldcup