Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

'பேரணிகள், கூட்டங்கள் வேண்டாம்'- மலேசியாவின் PKR கட்சி வேண்டுகோள்

வாசிப்புநேரம் -
'பேரணிகள், கூட்டங்கள் வேண்டாம்'- மலேசியாவின் PKR கட்சி வேண்டுகோள்

Facebook

மலேசியாவில் திரு அன்வார் இப்ராஹிம் பிரதமராக அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் கொண்டாட்டங்கள், கூட்டங்கள், பேரணிகள் எதையும் நடத்தவேண்டாம் என்று கெ அடிலான் (PKR) கட்சி துணைத்தலைவர் ரபிஸி ராம்லி (Rafizi Ramli) கூறியிருக்கிறார்.

PKR பக்கத்தான் ஹராப்பான் கூட்டணியில் முக்கிய அங்கம் வகிக்கும் கட்சி.

கட்சியின் அரசியல் தலைவர்கள் ஊடகங்களுக்கும் சமூக ஊடகங்களுக்கும் அளிக்கும் அறிக்கையில் கவனமாக இருக்கும்படியும் அவர் கேட்டுக்கொண்டார். அது புண்படுத்தும் நோக்கத்துடன் கூறப்படுவதாய்ப் பார்க்கப்படலாம்.

மலேசியாவை மறுநிர்மாணம் செய்யவேண்டும்; ஒவ்வொரு மலேசியரின் நலனையும் கருத்தில் கொண்டு நாட்டை முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்ற நோக்கத்துடன் செயல்படவேண்டும் திரு ராம்லி தமது அறிக்கையில் குறிப்பிட்டார்.

இன்னும் சற்று நேரத்தில் திரு அன்வாரின் பதவிப் பிரமாணம் இடம்பெறவிருக்கிறது.

மலேசியாவில் தேர்தல் முடிந்து சில நாள்கள் ஆகிவிட்டன. எந்தக் கூட்டணியும் பெரும்பான்மை இடங்களைப் பெறவில்லை. அதனால் பிரதமரை முடிவு செய்ய முடியாத நிலை ஏற்பட்டது.

மாமன்னர் கட்சிகளுடனும் கூட்டணிகளுடனும் கடந்த சில நாள்களாகப் பேச்சுவார்த்தை நடத்தி அடுத்த பிரதமரின் பெயரை இன்று அறிவித்தார்.
ஆதாரம் : CNA

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்

Aa