Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

ராகுல் காந்தியின் பதவி விலகலை காங்கிரஸ் பணிக்குழு ஒருமனதாக நிராகரித்தது

காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் பதவி விலகலை பணிக்குழு உறுப்பினர்கள் ஏற்றுக்கொள்ள மறுத்துள்ளனர்.

வாசிப்புநேரம் -


காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் பதவி விலகலை பணிக்குழு உறுப்பினர்கள் ஏற்றுக்கொள்ள மறுத்துள்ளனர்.

இந்தியப் பொதுத் தேர்தலில் தான் எதிர்பார்த்த முடிவுகளை பெறத் தவறியுள்ள காங்கிரஸ் கட்சி அதுகுறித்து விவாதிக்க, பணிக்குழு சந்திப்பை நடத்தியது.

இந்திய நேரப்படி முற்பகல் சுமார் 11 மணியளவில் தொடங்கியது சந்திப்பு.

அதில் திரு. ராகுல் காந்தி, திருவாட்டி சோனியா காந்தி, பிரியங்கா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோஹன் சிங் உள்ளிட்ட 52 பேர் கலந்துகொண்டனர்.

தாழ்த்தப்பட்டவர்கள், பழங்குடியினர், சிறுபான்மையினர், வசதி குறைந்தவர்கள்-ஆகியோருக்காகப் போராட, திரு. ராகுல் காந்தி தொடர்ந்து தலைமைப் பொறுப்பில் நீடிக்க வேண்டுமெனப் பணிக்குழு அவரை வலியுறுத்தியது.

சவால்மிக்க வருங்காலத்தில் கட்சியினரை வழிநடத்திச் செல்ல, திரு. ராகுல் காந்தியின் தலைமை தேவை என்றது பணிக்குழு.

காங்கிரஸ் கட்சியைச் சீரமைக்கும் அதிகாரத்தை அவருக்கு வழங்குவதாகவும் பணிக்குழு குறிப்பிட்டது.

காங்கிரஸ் கட்சி, தேர்தலில் தோல்வியடைந்துள்ளதே தவிர, போராடும் உணர்வை இழக்கவில்லை என்றது பணிக்குழு.

பணிக்குழுவின் முடிவில் ஆச்சரியப்பட ஏதுமில்லை என்று அரசியல் கவனிப்பாளர்கள் கருதுகின்றனர்.

கடந்த பொதுத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வரலாற்றிலேயே ஆகக் குறைவாக 44 இடங்களில் வென்றபோதும் இதே சூழ்நிலை ஏற்பட்டது.

திரு. ராகுல் காந்தியின் பதவிவிலகல் மறுக்கப்பட்டது.

இந்திய நாடாளுமன்றத்தின் 542 இடங்களில் பாரதீய ஜனதா கட்சி இம்முறை 303 இடங்களைத் தனித்துக் கைப்பற்றியது.

காங்கிரஸ் கட்சியால், 52 இடங்களில் மட்டுமே தனித்து வெல்ல முடிந்தது.

இந்தத் தோல்வியிலிருந்து மீளவேண்டுமேயானால், காங்கிரஸ் கட்சி தனது அணுகுமுறையை முற்றிலுமாக மாற்றி முழுமையான உருமாற்றம் காணவேண்டும் என்கின்றனர் விமர்சகர்கள்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்