Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

3,500 கிலோமீட்டர் நடைப்பயணத்தை முடித்துக்கொண்ட இந்திய எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி

வாசிப்புநேரம் -

இந்தியாவின் முக்கிய எதிர்த்தரப்புத் தலைவர் ராகுல் காந்தி தமது நீண்ட நடைப்பயணத்தை முடித்துக்கொண்டிருக்கிறார். 

கடந்த செப்டம்பர் மாதம் தமிழ்நாட்டில் தொடங்கிய அவரது நடைப்பயணம் சுமார் 135 நாள்கள் நீடித்தது. 

"Unite India" என்ற பெயரில் தொடங்கிய நடையில் அவரும் அவரது குழுவினரும் இந்தியாவின் 12 மாநிலங்களையும்  வட்டாரங்களையும் கடந்து சென்றனர்.

சுமார் 3,500 கிலோமீட்டர் தூரம் நடந்து ஜம்மு காஷ்மீர் மாநிலத் தலைநகர் ஸ்ரீநகரில் திரு ராகுல் நடையை முடித்துக்கொண்டார். 

வெறுப்புணர்வைத் தூண்டும் அரசியலுக்கு எதிராக, இந்தியாவை ஒன்றிணைக்கும் முயற்சியாக நடைப்பயணம் மேற்கொள்ளப்பட்டதாய் அவர் சொன்னார். 

இறுதி நாள் பேரணியில் பேசிய திரு ராகுல் மக்களின் ஆதரவுக்கு நன்றி தெரிவித்தார். 

திரு ராகுலின் நடைப்பயணத்தின்போது இந்தியாவின் பல பிரபலங்கள் அவருக்கு ஆதரவாகவும் ஆளும் பாரதிய ஜனதா கட்சிக்கு எதிராகவும் கருத்துகளைப் பதிவு செய்தனர். 

2014ஆம் ஆண்டு பாரதிய ஜனதா கட்சி ஆட்சியைக் கைப்பற்றியதிலிருந்து காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி செல்வாக்கை இழந்திருந்தார். 

அவர் மீது மக்கள் கொண்டுள்ள எண்ணத்தை நடைப்பயணம் மாற்றியமைக்கும் என்று காங்கிரஸ் கட்சி நம்புகிறது. 

அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் இந்தியப் 
பொதுத்தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடி மூன்றாம் தவணைக்குப் போட்டியிடவிருக்கிறார். 
 

ஆதாரம் : CNA

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்