Skip to main content
இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பில் மாண்டோர் சடலங்கள் மீட்பு
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

ஆசியா

இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பில் மாண்டோர் சடலங்கள் மீட்பு

வாசிப்புநேரம் -
இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பில் மாண்டோர் சடலங்கள் மீட்பு

(படம்: ADI PRIMA / AFP)

இந்தோனேசியாவின் மெராப்பி எரிமலை வெடித்துச் சிதறியதில் மாண்ட 11 மலையேறிகளின் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

முதலில் 49 பேர் மீட்கப்பட்டனர்.

இப்போது மேலும் மூவர் மீட்கப்பட்டுள்ளனர்.

இன்னும் 12 பேரைத் தேடும் பணிகள் தொடர்கின்றன.

சுமத்ரா தீவில் உள்ளது மெராப்பி எரிமலை.

எரிமலை வெடித்தபோது அந்தப் பகுதியில் 75 பேர் இருந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

வெடிப்பின்போது எரிமலை 3,000 மீட்டர் உயரத்துக்கு வானில் புகையைக் கக்கியது.

கார்களும் சாலைகளும் எரிமலைச் சாம்பலால் போர்த்தப்பட்டன.

எரிமலை வாயிலிருந்து 3 கிலோமீட்டர் சுற்றளவுள்ள பகுதிக்குள் செல்லக் குடியிருப்பாளர்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இன்று மேலும் சில சிறு வெடிப்புகள் நேர்ந்ததால் தேடல் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன.

அங்கு மலையேறச் செல்லும் எல்லாரும் பதிவு செய்வதில்லை.

அதனால் காணாமல்போனவர்கள் எண்ணிக்கை அதிகமாக இருக்கக்கூடுமென அஞ்சப்படுகிறது.

மெராப்பி எரிமலை இதற்குமுன் இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் வெடித்தது.

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்