ஷங்ஹாயில் துடைத்தொழித்த பின் மீண்டும் தலைதூக்கியிருக்கும் COVID-19

படம்: AFP/Hector Retamal
ஷங்ஹாயில் 5 நாள்களுக்குப் பின் மீண்டும் COVID-19 சம்பவங்கள் தலைதூக்கியிருக்கின்றன.
5 நாள்களாகத் தனிமைப்படுத்தும் வட்டாரத்துக்கு வெளியே எந்த ஒரு சம்பவமும் பதிவாகவில்லை.
அதையடுத்து ஜூன் முதல் தேதியிலிருந்து நகரம் முழுவதும் விதிக்கப்பட்டுள்ள முடக்கம் தளர்த்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
புதிய சம்பவங்கள் தோன்றினாலும் திட்டமிட்டபடி முடக்கம் தளர்த்தப்படும் என்று நம்பப்படுகிறது.
25 மில்லியன் பேர் வசிக்கும் வர்த்தக நகரான ஷங்ஹாயில் கிருமித்தொற்றைத் துடைத்தொழிக்க அதிகாரிகள் படாத பாடுபட்டனர்.
இருப்பினும் தனிமைப்படுத்தும் வட்டாரத்துக்கு வெளியே மூவருக்குக் கிருமித்தொற்று ஏற்பட்டுள்ளது.
கடுமையான கட்டுப்பாட்டின் கீழ் உள்ள வட்டாரங்களிலும் எண்ணிக்கை அதிகரிக்கிறது.
ஷங்ஹாய்ப் புறநகர்ப் பகுதிகளில், பூங்காக்கள் வரும் ஞாயிற்றுக்கிழமையிலிருந்து திறக்கப்படும்.
மற்ற பூங்காக்கள், கேளிக்கை இடங்கள் ஜூன் மாதம் முதல் திறந்திருக்கும்.
-Reuters