Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

Pfizer நிறுவன மாத்திரைகள் மூலம் தென் கொரியாவில் COVID-19 நோயாளிகளுக்கு சிகிச்சை

வாசிப்புநேரம் -
Pfizer நிறுவன மாத்திரைகள் மூலம் தென் கொரியாவில் COVID-19 நோயாளிகளுக்கு சிகிச்சை

(படம்: Pfizer via AP)

தென் கொரியா, இன்றுமுதல், Pfizer நிறுவன மாத்திரைகள் மூலம் COVID-19 நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கத் தொடங்கியுள்ளது. 

ஓமக்ரான் பாதிப்புக்கு ஆளாவோர் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், தென் கொரியா அந்த நடவடிக்கையை மேற்கொள்கிறது. 

சுமார் 21,000 Paxlovid மாத்திரைகள் தென் கொரியா சென்று சேர்ந்துள்ளன.

நாள்தோறும் ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு மாத்திரை மூலம் சிகிச்சையளிக்கப்படும். 

நோய்த்தொற்றுக்கு ஆளானோருக்கு, கடுமையாக நோய்வாய்ப்படுவதைத் தடுக்க அது உதவும். 

அதிக அபாயத்தில் உள்ள நோயாளிகள், 65 வயதுக்கு மேற்பட்டோர், நோய் எதிர்ப்புச் சக்தி குன்றியோர் ஆகியோருக்கு மாத்திரை மூலம் சிகிச்சை வழங்க முன்னுரிமை அளிக்கப்படும். 

இந்த மாதம் மேலும் 10,000 மாத்திரைகள் தென் கொரியா சென்று சேரும்.

ஆதாரம் : AFP

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்

Aa