Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

முதல் சந்திர விண்கலத்தைப் பாய்ச்சிய தென் கொரியா

வாசிப்புநேரம் -
முதல் சந்திர விண்கலத்தைப் பாய்ச்சிய தென் கொரியா

Jung Yeon-je / AFP


தென் கொரியா Danuri எனும் முதல் சந்திர விண்கலத்தைப் பாய்ச்சியுள்ளது. 

அதன் மூலம், நிலவு பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள நாடுகளின் பட்டியலில் தென் கொரியாவும் இணைந்துள்ளது. 

"நிலா", "மகிழ்ச்சி" என்று பொருள்தரும் கொரிய வார்த்தைகளின் கூட்டாக Danuri எனும் சொல் அமைந்துள்ளது. 

வரும் டிசம்பர் மாதம் Danuri விண்கலம், நிலவின் வட்டப்பாதையில் நுழையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அது சுமார் ஓராண்டு காலம் ஆய்வுப் பணிகளை மேற்கொள்ளும். 

நிலவின் காந்தப் புலம், அங்கிருக்கும் பொருள்களின் அளவு, மூலக்கூறுகள், யுரேனியம், தண்ணீர், ஹீலியம்-மூன்று போன்றவை பற்றியும் விண்கலம் ஆராயும். 

சூரியனின் வெளிச்சம் படாத துருவங்களின் இருண்ட பள்ளங்களையும் Danuri விண்கலம் படம்பிடிக்கும். 

NASA ஆய்வு நிறுவனம், இந்தியா, சீனா ஆகியவை நிலவில் ஆய்வுப் பணிகளை மேற்கொண்டு வருகின்றன. அவற்றுடன் Danuri-உம் இணைந்துகொள்ளும்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்

Aa