ஒரே நேரத்தில் 40 ரயில்கள்... அதிகபட்சம் 600 ஆயிரம் பயணிகள்..தென்கிழக்காசியாவின் ஆகப் பெரிய ரயில் நிலையம்..படங்களில்

AP Photo/Sakchai Lalit
30 ஹெக்டர் பரப்பளவில் 4 தளங்களைக் கொண்ட ரயில் நிலையம்....
தென்கிழக்காசியாவின் ஆகப் பெரிய ரயில் நிலையம்....

தாய்லந்துத் தலைநகர் பேங்காக்கில் புதிய ரயில் நிலையம் அண்மையில் செயல்படத் தொடங்கியது.
12 தளமேடைகள்...24 தடங்கள்....ஒரு நேரத்தில் 40 ரயில்கள் வரை இயக்கலாம்...

உச்ச நேரங்களில் நாள்தோறும் 600,000 பயணிகளைக் கையாளலாம்...
முன்பிருந்த Hua Lamphong ரயில் நிலையத்துடன் ஒப்பிடுகையில் அது 10 மடங்குக்கும் அதிகம்....

சுமார் ஒரு பில்லியன் டாலர் செலவில் கட்டப்பட்ட ரயில் நிலையத்தில் அதிநவீனத் தொழில்நுட்பம்...
செயற்கை நுண்ணறிவில் செயல்படும் 120 கண்காணிப்புக் கேமராக்கள்...



