Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

தென்கொரியாவில் பெரிய ஒன்றுகூடலில் கட்டாயமாக முகக்கவசம் அணியும் விதிமுறை தளர்த்தப்படலாம்

வாசிப்புநேரம் -

தென்கொரியா பெரிய அளவிலான ஒன்றுகூடலில் மக்கள் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும் என்ற விதியைத் தளர்த்தத் திட்டமிடுகிறது. 

தென்கொரியாவில் புதிதாக COVID-19 நோய்த்தொற்று அடையாளம் காணப்படுவோர் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ளது. 

இந்த வாரமே கட்டுப்பாடு தளர்த்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது 50க்கும் அதிகமானோர் ஒன்றுகூடும் இசைக் கச்சேரி போன்ற நிகழ்ச்சிகளில் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டியது கட்டாயம். 

தவறுவோருக்கு அபராதம் விதிக்கப்படும். 

தென்கொரியாவில் உள்ளரங்குகளில் இருக்கும்போது முகக்கவசம் அணிந்திருக்க வேண்டியது கட்டாயம்.

அடுத்த ஆண்டு தொடக்கம்வரை அந்த விதி தொடரக்கூடும்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்