Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

உட்புறங்களில் முகக்கவசம் அணியும் கட்டுப்பாட்டைத் தளர்த்தும் தென்கொரியா

வாசிப்புநேரம் -

தென்கொரியா உட்புறங்களில் முகக்கவசம் அணிவதைக் கைவிடத் திட்டமிடுகிறது. 

தற்போது உட்புறங்களில் மக்கள் முகக்கவசம் அணிவது கட்டாயமாக இருக்கிறது. 

இன்று அங்கு COVID-19 எண்ணிக்கை 20,000க்கும் குறைவாகப் பதிவாகியுள்ளது. 

தினசரி பல 100 ஆயிரம் பேருக்குக் COVID-19 ஏற்பட்ட நிலைமையில் இருந்து தென் கொரியாவில் பெரிய முன்னேற்றம் தெரிகிறது. 

மக்கள் நாளை முதல் (30 ஜனவரி) பொது இடங்களுக்கு முகக்கவசம் இன்றிச் செல்ல அனுமதிக்கப்படுவர். 

பள்ளிக்கூடம், விளையாட்டு நிலையம் போன்ற இடங்களுக்குச் செல்ல முகக்கவசம் தேவைப்படாது. 

எனினும் மருத்துவமனை, பொதுப் போக்குவரத்து போன்றவற்றுக்கு முகக்கவசம் கட்டாயம். 

கடந்த ஆண்டு மே மாதத்தில் வெளிப்புறங்களில் முகக்கவசம் அணிவதைத் தென் கொரியா கைவிட்டது. 

தற்போது நிலைமை தொடர்ந்து மேம்படுவதால் முகக்கவசத்தை மேலும் கைவிடும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

ஆதாரம் : AGENCIES

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்