ஆசியா செய்தியில் மட்டும்
ஆடல், பாடல் இல்லாமல் கொண்டாட்டமா? கிறிஸ்துமஸ் சிறப்புப் பாடல்கள்...
Christmas Carols எனப்படுவது கிறிஸ்துமஸ் திருநாளையொட்டிப் பாடப்படும் சிறப்புக் கிறிஸ்தவப் பாடல்களைக் குறிக்கிறது. பாடல்களை மக்கள் குழுக்களாகப் பாடுவார்கள்.
குழுவாகப் பாடும்போது இசைவாத்தியக் கருவிகளும் பயன்படுத்தப்படுகின்றன. ஒருசில வேளைகளில் பாடல்குழு உறுப்பினர்கள் கை அசைவதையும் பாடலுக்கேற்ப ஆடுவதையும் கண்டு மகிழலாம்.
அமெரிக்கா போன்ற பெரிய நாடுகளில் பாடல்குழுக்கள் வீட்டுக்கு வீடு சென்று வாசலில் நின்று பாடி, பண்டிகைக்காலத்தில் குதூகலத்தைச் சேர்ப்பது வழக்கம்.
சிங்கப்பூரிலும் மலேசியாவிலும் கிறிஸ்துமஸ் பாடல்களை மகிழ்ச்சியுடன் பாடும் குழுக்களைக் காண்போம்... காணொளியில்...