Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

கடன் கொடுத்த நாடுகளுடன் இலங்கை பேச்சுவார்த்தை

வாசிப்புநேரம் -
கடன் கொடுத்த நாடுகளுடன் இலங்கை பேச்சுவார்த்தை

(படம்: AFP)

இலங்கை அதிகாரிகள் வெளிநாட்டுக் கடனை மறுசீரமைப்பது குறித்த பேச்சு வார்த்தையைத் தொடங்கியிருக்கின்றனர். 

கடன் கொடுத்த நாடுகளோடு பேச்சு நடைபெறுகிறது. 

வரலாறு காணாத பொருளியல் நெருக்கடியைச் சந்திக்கும் இலங்கை கடனைத் திருப்பிச் செலுத்துவது குறித்து கடன் தந்த தரப்புகளோடு பேச்சு நடத்தி வெற்றி பெற்றால்தான் அனைத்துலகப் பண நிதியத்திடம் புதிதாகக் கடன்பெற முடியும். 

அனைத்துலகப் பணநிதியம் 2.9 பில்லியன் டாலர் கடன்தர முதற்கட்ட ஒப்புதல் தந்துள்ளது. 

மற்ற உலக அமைப்புகளிடம் இருந்து கடன் வாங்க இலங்கை முனைகிறது. 

இலங்கையில் அந்நியச் செலாவணிக்கு மிகப்பெரிய பற்றாக்குறை நிலவுகிறது. 

உணவு, மருந்து, எரிபொருள் போன்ற அத்தியாவசியப் பொருள்களை வாங்க முடியாமல் அது திணறுகிறது. 

இலங்கைக்கு 47.3 பில்லியன் டாலர் வெளிநாட்டுக் கடன் இருப்பதாகக்  கடந்த ஆண்டு இறுதியில் மதிப்பிடப்பட்டது. 

சீனா, ஜப்பான், இந்தியா ஆகியவை அதிகம் கடன் தந்த நாடுகள். 

இலங்கையின் உள்ளூர் நாணயக் கணக்குப்படி அதன் வெளிநாட்டு மொத்தக் கடன் 53.6 பில்லியன் டாலர் என்று நிதி அமைச்சு கடந்த மாதம் கூறியது.

-Reuters

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்

Aa