பதவி விலகப் போவதில்லை - இலங்கையின் மத்திய வங்கி ஆளுநர்

(கோப்புப் படம்: AFP / Ishara S. KODIKARA)
இலங்கையில் அரசியல் நிலைத்தன்மை மேம்பட்டிருப்பதால் முன்பு கூறியதுபோல் பதவி விலகப் போவதில்லை என்று அந்நாட்டு மத்திய வங்கியின் ஆளுநர் கூறியிருக்கிறார்.
ஆளுநர் நந்தலல் வீரசிங்க விலகப் போவதாக இதற்குமுன் கூறியிருந்தார்.
நாட்டின் கடனை மறுசீரமைக்கும் திட்டம் நிறைவு பெற்றுவிட்டதாகவும் நாளை அது அமைச்சரவையிடம் ஒப்படைக்கப்படும் என்றும் அவர் சொன்னார்.
பொருளியல் நிலைமை மோசமாக இருக்கும் நேரத்தில் அரசியல் குழப்பமும் நீடித்தால் பதவி விலகப் போவதாகக் கடந்த வாரம் அவர் கூறினார்.
இதற்குமுன் பிரதமரும் இல்லை அமைச்சரவையும் இல்லை என்ற நிலையில் தாம் அவ்வாறு கூறியதாக திரு. வீரசிங்க செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.