Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

இலங்கையில் 12 மணிநேரத்திற்கு ஊரடங்கு தளர்த்தப்படுகிறது

வாசிப்புநேரம் -

இலங்கை முழுவதும் இன்று (14 மே) 12 மணிநேரத்திற்கு ஊரடங்கு தளர்த்தப்படுகிறது.

திங்கட்கிழமை (9 மே) அரசாங்க ஆதரவாளர்களுக்கும் எதிர்ப்பாளர்களுக்கும் இடையே கடுஞ்சண்டை மூண்டதால் ஊரடங்கு விதிக்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து பிரதமராக இருந்த திரு. மகிந்த ராஜபக்ச பதவி விலகினார்.

நேற்று (13 மே) திரு. ரணில் விக்ரமசிங்க புதிய பிரதமராகப் பதவியேற்றார்.

எதிர்த்தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சரவையில் சேர மறுத்துவிட்டனர்.

அதனால் திரு. விக்ரமசிங்க ஐக்கிய அரசாங்கம் அமைக்கத் தீவிரமாக முயல்கிறார்.

திரு. ராஜபக்ச குடும்பத்துக்கு நெருக்கமான திரு. விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிக்க மறுக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், புதிதாகத் தேர்தல் நடத்த வலியுறுத்துகின்றனர்.

திரு. விக்ரமசிங்கவின் நியமனத்தை நிராகரித்த எதிர்த்தரப்பு SJB கட்சி, நேற்று அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்களுடன் கை கோத்தது.

நாட்டின் பொருளியல் நிலைமை மோசமானதற்கு அதிபர் கோத்தபாய ராஜபக்சவே பொறுப்பு; அவர் பதவி விலக வேண்டும் என்று ஆர்ப்பாட்டக்காரர்கள் வலியுறுத்துகின்றனர்.

-Reuters

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்