Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

இந்தோனேசியாவின் ஜாவா தீவில் 5.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்

வாசிப்புநேரம் -
இந்தோனேசியாவின் ஜாவா தீவை 5.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் உலுக்கியுள்ளது.

அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் அதனைத் தெரிவித்தது.

நிலநடுக்கம் 112 கிலோமீட்டர் ஆழத்தில் மையங்கொண்டிருந்தது. மேற்கு ஜாவாவின் பஞ்சார் (Banjar) எனும் நகரிலிருந்து 18 கிலோமீட்டர் தென் கிழக்கே நிலநடுக்கம் ஏற்பட்டது.

உயிருடற்சேதம் குறித்த உடனடித் தகவல்கள் இல்லை.

இரு வாரங்களுக்கு முன் தீவை உலுக்கிய நிலநடுக்கத்தில் 330 பேர் மாண்டனர்.

அது அளவுகோலில் 5.6 ரிக்டர். பல கட்டடங்கள் சரிந்தன. நிலச்சரிவுகளும் ஏற்பட்டன. அதில் ஆயிரக்கணக்கானோர் காயமடைந்தனர்.

பலர் வீடுகளை இழந்தனர்.

அதிலிருந்து ஜாவா தீவு மீள்வதற்குள் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்