Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

பிலிப்பீன்ஸ் பக்கம் திரும்பியிருக்கும் மாவார் சூறாவளி

வாசிப்புநேரம் -
பிலிப்பீன்ஸ் பக்கம் திரும்பியிருக்கும் மாவார் சூறாவளி

(படம்: AFP/National Oceanic and Atmospheric Administration/Jose Romero)

பிலிப்பீன்ஸில் மாவார் (Mawar) சூறாவளி வீசுகிறது.

Betty சூறாவளி என்று உள்ளூரில் அது அழைக்கப்படுகிறது. அது மணிக்கு 250 கிலோமீட்டர் வேகத்தில் காற்றைக் கொண்டுவந்துள்ளது.

புயல் காற்றால் பிலிப்பீன்ஸின் வடக்குப் பகுதியில் கனமழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அந்த வட்டாரத்தில் உள்ள தீவுக்கூட்டத்தை அல்லது தைவானை சூறாவளி தாக்காது என்று தற்போதைய வானிலை முன்னுரைப்புகள் கூறுகின்றன.

மாறாக அது வலுவிழந்த நிலையில் அடுத்த வாரம் ஜப்பானின் ஆக்கினாவா (Okinawa) தீவுகளில் வீசும் என்று நம்பப்படுகிறது.

முன்னதாக இந்த வாரத்தில் அமெரிக்காவின் குவாம் பகுதியில் வீசிய மாவார் சூறாவளி மரங்களை வேரோடு சாய்த்தது.

சுவர்கள் இடிந்து விழுந்தன; மின்சாரக் கம்பிகள் அறுந்தன.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்