Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

ஜப்பானியப் பிரதமர் மீதான புகை குண்டுத் தாக்குதல்....ஆடவர் மீது குற்றச்சாட்டு

வாசிப்புநேரம் -
ஜப்பானியப் பிரதமர் மீதான புகை குண்டுத் தாக்குதல்....ஆடவர் மீது குற்றச்சாட்டு

(படம்: JIJI PRESS / AFP))

ஜப்பானியப் பிரதமர் ஃபுமியோ கிஷிடா (Fumio Kishida) பங்கேற்ற நிகழ்வில் புகை குண்டுத் தாக்குதல் நடத்திய சந்தேக நபர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

சம்பவத்தை அடுத்து ஜப்பான் நாகானோவில் (Nagano) பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. G7 தொழில்வள நாடுகளின் அரசதந்திரிகள் கலந்துகொள்ளும் உச்சநிலைச் சந்திப்பு அங்கு நடைபெறுகிறது.

கடந்த சனிக்கிழமை (15 ஏப்ரல்) திரு.கிஷிடா பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டபோது சந்தேக நபர் புகைக் குண்டை வீசினார்.

திரு.கிஷிடாவுக்கு எந்த ஆபத்தும் ஏற்படவில்லை. என்றாலும் முக்கிய அரசியல்வாதிகள், அரச தந்திரிகளின் பாதுகாப்பு குறித்த அச்சம் எழுந்துள்ளது.

சம்பவத்தில் தொடர்புடைய ஆடவர் கையில் கத்தியும், மற்றொரு வெடிபொருளும் வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அந்தத் தாக்குதலுக்கான காரணம் தெரியவில்லை. அதில் காவல்துறை அதிகாரி ஒருவர் காயமடைந்தார்.

9 மாதங்களுக்கு முன்னர் ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்ஸோ அபே (Shinzo Abe) படுகொலை செய்யப்பட்டதை நினைவுபடுத்தும் வகையில் அந்தச் சம்பவம் அமைந்தது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்