Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

சீனாவின் ராணுவ நடவடிக்கைகளுக்குத் தைவான் கண்டனம்

வாசிப்புநேரம் -
சீனாவின் ராணுவ நடவடிக்கைகளுக்குத் தைவான் கண்டனம்

(படம்: AFP/Mandy CHENG)

தைவான் தனது வட்டாரத்தைச் சுற்றி சீனா மேற்கொண்ட ராணுவ நடவடிக்கைகளுக்குக் கண்டனம் தெரிவித்துள்ளது. 

நேற்று (4 ஆகஸ்ட்) தொடங்கிய சீனாவின் ராணுவ நடவடிக்கைகள் இன்றும் தொடர்கின்றன. சீனா புவியீர்ப்பு ஏவுகணைகளைப் பாய்ச்சியதோடு தைவானைச் சுற்றியுள்ள பகுதிகளுக்குப்   போர்விமானங்களையும் போர்க்கப்பல்களையும் அனுப்பியது. 

அதன் காரணமாக கடற்பகுதிகளில் வழக்கமான வர்த்தக நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன.

வரும் ஞாயிற்றுக்கிழமை வரை ராணுவ நடவடிக்கைகள் தொடரும் என்று பெய்ச்சிங் தெரிவித்துள்ளது. 

சீனா, "போர் விளையாட்டு" நடவடிக்கைகளைத் தற்காத்துப் பேசியதோடு அவ்வாறு செய்வது அவசியமானது என்றும் கூறியது.  

அமெரிக்க மக்களவை நாயகர் நான்சி பெலோசி சீனாவின் எச்சரிக்கையை மீறி தைவானுக்குச் சென்றதால் எதிர்-நடவடிக்கைகளை எடுக்கவேண்டிய நிலை ஏற்பட்டதாகப் பெய்ச்சிங் தெரிவித்தது. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்

Aa