Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

தைவான் விரைவில் கட்டாயமாகத் தனிமைப்படுத்திக்கொள்ளும் விதிமுறையைத் தளர்த்தத் திட்டம்

வாசிப்புநேரம் -
தைவான் விரைவில் கட்டாயமாகத் தனிமைப்படுத்திக்கொள்ளும் விதிமுறையைத் தளர்த்தத் திட்டம்

(கோப்புப் படம்: AP Photo/Chiang Ying-ying)

தைவான், உள்வரும் பயணிகளுக்கான COVID-19 கட்டாயத் தனிமை உத்தரவை முடிவுக்குக் கொண்டுவரத் திட்டமிடுகிறது. 

அடுத்த வாரத்திலிருந்து மற்ற கட்டுப்பாடுகளைத் தளர்த்தவிருப்பதாகவும் அது தெரிவித்தது. 

இதற்கு முன்னர், குறிப்பிட்ட சில நாடுகளின் பயணிகள் தைவானுக்கு விசா இன்றிச் செல்லலாம்.  

கிருமிப்பரவல் சூழலில் அது தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டிருந்தது. 

அந்த நாடுகளின் பயணிகள் விரைவில் மீண்டும் விசா இன்றி அங்குப் போகமுடியும் என்று இப்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.

எல்லாம் சீராகச் சென்றால், கட்டாயமாகத் தனிமைப்படுத்திக்கொள்ளும் விதிமுறை அடுத்த மாதம் 13ஆம் தேதி முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

அப்போது தைவானுக்குள் நுழையும் பயணிகளின் எண்ணிக்கை வாரத்துக்கு 150,000ஐத் தொடும் என்று கணிக்கப்படுகிறது. 

ஆயினும் கிருமி தொற்றியது உறுதிசெய்யப்பட்ட பயணிகள், இல்லத்திலோ ஹோட்டலிலோ தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டியது கட்டாயம். 

இந்த ஆண்டுத் தொடக்கத்திலிருந்து தைவானில் சமூக அளவில் சுமார் 6 மில்லியன் பேர் கொரோனா கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டனர். 

கிட்டத்தட்ட அனைவருக்குமே அறிகுறி எதுவும் இல்லை அல்லது மிதமான அறிகுறிகள் மட்டுமே இருந்தன.

அதனால் அரசாங்கம், விதிமுறைகளைக் கடுமையாக்குவதற்குப் பதிலாகத் தளர்த்தியது.

-Reuters

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்