தாய்லந்தின் முன்னைய பிரதமருக்குச் சிகிச்சை
வாசிப்புநேரம் -

AFP
தாய்லந்தின் முன்னைய பிரதமர் தக்சின் ஷினவாட் (Thaksin Shinawatra) சென்ற வாரம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதாக அவரது மகள் பேதொங்தார்ன் ஷினவாட் (Paetongtarn Shinawatra) இன்று (19 செப்டம்பர்) தெரிவித்துள்ளார்.
"சென்ற வாரம் எனது தந்தை மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். அவர் குணமடைய எவ்வளவு காலம் ஆகும் என்பது எனக்குத் தெரியவில்லை," என்று அவர் கூறியிருந்தார்.
திருவாட்டி பேதொங்தார்ன் சிகிச்சையின் விவரங்களை வெளியிடவில்லை.
சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட திரு தக்சினை முன்கூட்டியே விடுதலை செய்யும்படி அவரது குடும்பம் கேட்டுக்கொண்டது.
74 வயது திரு தக்சின் தாய்லந்துக்குத் திரும்பிய அதே நாள் சிறையில் அடைக்கப்பட்டார்.
அவருக்கு 8 ஆண்டுச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
சிறையில் அடைக்கப்பட்ட முதல் நாள் அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

ஆதாரம் : AFP