தாய்லந்து முன்னையப் பிரதமர் தக்சின் ஷினவாட்டின் 8 ஆண்டுச் சிறைத்தண்டனை ஓராண்டுக்குக் குறைக்கப்பட்டது
வாசிப்புநேரம் -
(படம்: Reuters/Athit Perawongmetha)
தாய்லந்தின் முன்னையப் பிரதமர் தக்சின் ஷினவாட்டுக்கு (Thaksin Shinawatra) விதிக்கப்பட்ட 8 ஆண்டுச் சிறைத் தண்டனை ஓராண்டாகக் குறைக்கப்பட்டுள்ளது.
தாய்லந்து மன்னர் மஹா வஜ்ரலொங்கோர்னின் (Maha Vajiralongkorn) அந்த முடிவை அரச மாளிகை வெளியிட்ட அறிக்கை தெரிவித்தது.
திரு. தக்சின் தமது குற்றத்தை ஒப்புக்கொண்டுவிட்டதாகவும் அதற்காக உண்மையில் வருந்துவதாகவும் அறிக்கை குறிப்பிட்டது.
மேலும் அவர் உடல்நலம் குன்றியிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.
நாட்டு முன்னேற்றத்துக்கு அவர் பங்காற்றியுள்ளதாலும், மன்னருக்குத் தமது விசுவாசத்தைத் தெரிவித்துள்ளதாலும் தண்டனை குறைக்கப்படுவதாக அறிக்கை கூறியது.
சிறையிலிருந்து வெளியேவந்ததும் அவர் நாட்டுக்கு நன்மை புரிவார் என்றும் அது நம்பிக்கை தெரிவித்தது.
74 வயதுச் செல்வந்தரான திரு. தக்சின், 2 முறை தாய்லந்தின் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2006ஆம் ஆண்டு ராணுவம் நடத்திய ஆட்சிக் கவிழ்ப்பில் அவர் ஆட்சியை இழந்தார்.
15 ஆண்டுகள் சுயமாக நாடு கடந்து வாழ்ந்து வந்தார். அண்மையில்தான் தாயகம் திரும்பினார். நாடு திரும்பிய உடனேயே அவருக்கு 8 ஆண்டுச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
ஊழல், அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தியது ஆகிய குற்றங்களுக்காக அவருக்கு அந்தத் தண்டனை விதிக்கப்பட்டது.