வயலில் தூங்கும் ராட்சதப் பூனைகள்

(படம்: REUTERS/Napat Wesshasartar)
தாய்லந்தின் வடக்குப் பகுதியின் வயல்களில் உள்ள ராட்சதப் பூனை உருவங்கள் பலரையும் ஈர்த்துள்ளன.
சியாங் ராய் (Chiang Rai) மாநிலத்தில் நெல் விளையும் வயலில் 3 விவசாயிகள் பல்வேறு பயிர்களைக் கொண்டு பூனை உருவங்களை அமைத்தனர்.

பயிர்களை எந்த இடத்தில் வைப்பது, பயிர்கள் வளர்ந்தால் அவற்றின் உருவம் எப்படி மாறும் என்பதை முன்பே கவனமாகத் திட்டமிட்டுப் பூனை உருவங்களை அமைக்க வேண்டியிருந்ததாக விவசாயிகள் கூறினர்.

தூங்கிக்கொண்டிருக்கும் பூனை...கையில் மீனைப் பிடித்திருக்கும் பூனை...
போன்று பல விதமான உருவங்கள் அமைக்கப்பட்டன.

பூனைகளைப் பார்க்க ஆயிரக்கணக்கானோர் வருவார்கள் என்று அவர்கள் எதிர்பார்க்கின்றனர்.