Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

தாய்லந்தில் எருமைப் பந்தயம்... 2 ஆண்டுக்குப் பின் மீண்டும் திரும்பியது

வாசிப்புநேரம் -

தாய்லந்தின் சோன்புரி (Chonburi) வட்டாரத்தில் எருமைப் பந்தயங்கள் ஈராண்டுக்குப் பின் மீண்டும் திரும்பியுள்ளன.

இன்று (ஜூன் 26) நடைபெற்ற அந்தப் பாரம்பரியமான பந்தயம் நெல் பயிருக்கான நாற்று நடும் பருவத்தின் தொடக்கத்தைக் குறிக்கின்றது.

வயலில் 4 ஜோடி எருமைகள் களம் இறங்கும். 

அவற்றை வழிநடத்துவோர் விலங்குகளைக் கட்டுக்குள் வைத்திருப்பதோடு நிமிர்ந்தும் நிற்க வேண்டும்.

அந்தப் பந்தயத்திற்காகப் போட்டியாளர்கள் தங்கள் எருமைகளுடன் வாரக் கணக்கில் பயிற்சி செய்வதுண்டு.

ஓடிக்கொண்டிருக்கும் எருமைகள் ஒன்றுக்கொன்று நெருக்கமாக வந்தால் விபத்து ஏற்படும் வாய்ப்புகள் உண்டு. அதனால் போட்டியாளர்களுக்குக் கவனம் தேவை.

ஆபத்து நிறைந்த பந்தயம் என்றாலும் பாரம்பரியத்தைக் கட்டிக்காப்பதற்காக அதில் பங்கெடுப்பதாகச் சிலர் கூறினர். 

-AFP

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்