Skip to main content
பேருந்து மரத்தில் மோதி விபத்து
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

பேருந்து மரத்தில் மோதி விபத்து - 14 பேர் மரணம்

வாசிப்புநேரம் -
தென் தாய்லந்தில் ஈரடுக்குப் பயணிகள் பேருந்து மரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானதில் குறைந்தது 14 பேர் மாண்டனர். 32 பேர் காயமடைந்ததாக ஆரம்பக்கட்ட விசாரணைகள் காட்டுகின்றன.

அந்தப் பேருந்து பேங்காக்கில் இருந்து நெடுந்தூரம் பயணம் மேற்கொண்டிருந்தபோது விபத்து நிகழ்ந்தது.

பேருந்தின் முன்பகுதி இரண்டாகப் பிளந்த நிலையில் அதன் நடுவே மரம் நிற்பதைக் காட்டும் படங்களை உள்ளூர் ஊடகங்கள் வெளியிட்டன.

விபத்துக்கான காரணம் இன்னும் தெரியவில்லை என்று காவல்துறை AFP செய்தியிடம் தெரிவித்தது.

ஆனால் விபத்தின்போது ஓட்டுநர் தூக்கக் கலக்கத்தில் இருந்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

கடுமையாகக் காயம்பட்ட போதும் ஓட்டுநர் உயிர்தப்பினார்.

அவர் மதுபானம் அருந்தியிருந்தாரா என்பது ஆராயப்படுகிறது.

விபத்தில் மரணமுற்றவர்கள் அனைவரும் தாய்லந்துக் குடிமக்களா என்பதைக் காவல்துறை விசாரித்துவருகிறது.

உலகில் அதிகமான சாலை விபத்துகள் பதிவாகும் நாடுகளில் தாய்லந்தும் ஒன்று. அங்கு ஆண்டுதோறும் விபத்துகளில் 20,000 பேர் மாண்டுபோவதாக உலகச் சுகாதார நிறுவனத்தின் தகவல் கூறுகிறது.
ஆதாரம் : AFP

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்