Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

தாய்லந்துத் தலைநகர் பேங்காக்கில் ஒரே நாளில் 900க்கும் மேற்பட்டவர்களுக்கு COVID-19 தொற்று

வாசிப்புநேரம் -
தாய்லந்துத் தலைநகர் பேங்காக்கில் ஒரே நாளில் 900க்கும் மேற்பட்டவர்களுக்கு COVID-19 தொற்று

(படம்: AFP)

தாய்லந்துத் தலைநகர் பேங்காக்கில் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அங்கு, புதிதாய் 900க்கும் மேற்பட்டோருக்குக் கிருமி தொற்றியுள்ளது.

பாதிக்கப்பட்டவர்களில் 300 பேர், மதுக் கூடங்களாகச் செயல்படும் உணவகங்களில் பாதிக்கப்பட்டவர்கள். மாணவர்கள் தங்குமிடத்திலும் பலர் கிருமித்தொற்றுக்கு ஆளாயினர்.

குறைவான காற்றோட்டம் உள்ள பகுதிகளையும் அதிக கூட்டமுள்ள இடங்களையும் தவிர்க்கும்படி மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. முகக்கவசம் அணியாதவர்களோடு நெருங்கிப் பழகவேண்டாமென்றும் கூறப்பட்டது. 

பயணத் திட்டங்களை ஒத்திவைக்க வலியுறுத்தப்பட்டது. பேங்காக்கில் இதுவரை பெரிய அளவில் கிருமித்தொற்றுக் குழுமங்கள் உருவாகவில்லை. 

இருப்பினும், விரைந்து பரவக்கூடிய ஓமக்ரான் கிருமிப்பரவலுக்குத் தயாராகக், குறைந்தது 10,000 மருத்துவமனைப் படுக்கைகளைத் தாய்லந்து அதிகாரிகள் ஒதுக்கிவைத்துள்ளனர்.

தேசிய அளவில் புதிதாக எண்ணாயிரத்துக்கும் மேற்பட்டோருக்குக் கிருமித்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்

Aa