Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

தாய்லந்தின் பயணத்துறை சூடுபிடித்துள்ளது!

வாசிப்புநேரம் -
தாய்லந்துக்கு இவ்வாண்டில் இதுவரை 19 மில்லியன் சுற்றுப்பயணிகள் வருகையளித்திருப்பதாக அந்நாட்டின் பயணத்துறை அமைச்சு இன்று (19 செப்டம்பர்) தெரிவித்துள்ளது.

வெளிநாட்டினர் வருகையால் மொத்தம் 22.26 பில்லியன் டாலர் வருவாயை ஈட்டியிருப்பதாகவும் அது சொன்னது.

இவ்வாரம் கூடுதலான சுற்றுப்பயணிகளை எதிர்பார்ப்பதாகத் தாய்லந்துப் பயணத்துறை தெரிவித்துள்ளது.

சீனா, கஸக்ஸ்தான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த சுற்றுப்பயணிகள் செப்டம்பர் 25ஆம் தேதியிலிருந்து விசாயின்றித் தாய்லந்துக்குச் செல்லலாம்.

அதிக வருகையாளர்களைக் கவர, தாய்லந்தின்
புதிய அரசாங்கம் அந்தத் தற்காலிகத் திட்டத்தை அறிமுகப்படுத்தியது.

அந்தத் திட்டம் செப்டம்பர் 25ஆம் தேதி முதல் அடுத்த ஆண்டு (2024) பிப்ரவரி 29ஆம் தேதி வரை நடப்பில் இருக்கும்.
ஆதாரம் : Reuters

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்