Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

தாய்லந்தில் சமூக அளவில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம்

தாய்லந்து COVID-19 குறித்த விழிப்புநிலையை இரண்டாவது ஆக உயரிய நிலைக்கு உயர்த்தியுள்ளது.

வாசிப்புநேரம் -
தாய்லந்தில் சமூக அளவில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம்

(படம்: AFP)

தாய்லந்து COVID-19 குறித்த விழிப்புநிலையை இரண்டாவது ஆக உயரிய நிலைக்கு உயர்த்தியுள்ளது.

ஓமக்ரான் ரகக் கிருமிப்பரவல் அதிகரித்துள்ளது அதற்குக் காரணம்.

உயர்த்தப்பட்ட விழிப்புநிலையால் சமூகத்திலும் வர்த்தக நடவடிக்கைகளிலும் கடுமையான கட்டுப்பாடுகள் மீண்டும் அறிமுகம் ஆகக்கூடும்.

வீட்டிலேயே இருந்து வேலை செய்யுமாறு, அதிகாரிகள் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டனர்.

தேவையற்ற பயணங்களையும் அதிக ஆபத்துள்ள இடங்களையும் தவிர்க்குமாறு அவர்கள் வலியுறுத்தினர்.

கூடுதல் கட்டுப்பாடுகள்குறித்து விவாதிக்க அரசாக்கத்தின் கோவிட் பணிக்குழு நாளை கூடவிருக்கிறது.

அதன்முடிவில் சில வர்த்தகங்கள் மீண்டும் மூடவேண்டிவரலாம்.

தாய்லந்துக்குச் செல்லும் பயணிகளுக்கான பயணக் கட்டுப்பாடுகளும் கடுமையாகலாம்.

வரும் வாரங்களில் பல்லாயிரம் பேர் கிருமித்தொற்றுக்கு ஆளாகக்கூடுமென அதிகாரிகள் எதிர்பார்க்கின்றனர்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்