Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

தாய்லந்தில் சுற்றுலாத்துறை மேம்பட்டுள்ளது... ஆனால் இன்னும் முழுமையாக மீளவில்லை

வாசிப்புநேரம் -

தாய்லந்து சென்றுதிரும்பிய  சுற்றுப்பயணிகளின் எண்ணிக்கை கடந்த ஆண்டு அதிகரித்துள்ளது. நோய்ப்பரவலுக்கு முந்தையக் காலகட்டத்துடன் ஒப்பிடும்போது அந்த எண்ணிக்கை குறைவே என தாய்லந்து தெரிவித்தது.

சென்ற ஆண்டு 11.81 மில்லியன் சுற்றுப்பயணிகள் தாய்லந்து சென்றனர். 2021 ஆம் ஆண்டுடன் ஒப்புநோக்க அது 400,000 மட்டுமே அதிகமாகும்.

இந்த ஆண்டு தாய்லந்து செல்வோர் எண்ணிக்கை இரட்டிப்பாகி 25 மில்லியனைத் தொடும் என தாய்லந்து சுற்றுலாத் துறை கணித்துள்ளது.

2019ஆம் ஆண்டு தாய்லந்துக்குச் சென்று திரும்பிய 39.8 மில்லியன் சுற்றுப்பயணிகளுடன் ஒப்பிட்டால் அந்த எண்ணிக்கை குறைவு.

ஜூன் மாதத்திலிருந்து வெளிநாட்டுப் பயணிகளுக்கு 300 பாட் (12 வெள்ளி 6 காசு) கட்டணம் விதிக்கத் தாய்லந்து திட்டமிடுகிறது.

2027க்குள் சுற்றுப்பயணிகளின் எண்ணிக்கையை 80 மில்லியனாக அதிகரிக்கவும் தாய்லந்து இலக்கு கொண்டுள்ளது.

ஆதாரம் : AGENCIES

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்