Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

தக்சின் ஷினவாட் நன்னடத்தை அடிப்படையில் முன்கூட்டியே சிறையிலிருந்து விடுவிக்கப்படலாம்

வாசிப்புநேரம் -

தாய்லந்தின் முன்னையப் பிரதமர் தக்சின் ஷினவாட் (Thaksin Shinawatra) நன்னடத்தையின் அடிப்படையில் வரும் பிப்ரவரி மாத இறுதியில், முன்கூட்டியே சிறையிலிருந்து விடுவிக்கப்படலாம்.

ஏற்கெனவே அவரது 8 ஆண்டுச் சிறைத்தண்டனை மன்னரால் ஓராண்டாகக் குறைக்கப்பட்ட நிலையில் அண்மை அறிவிப்பு வந்துள்ளது.

தண்டனைக் காலத்தில் 6 மாதத்தை நிறைவேற்றியபிறகு, தக்சின் நன்னடத்தையின் அடிப்படையில் விடுதலையாகத் தகுதி பெறுவார் என்று சிறைத்துறையின் மூத்த அதிகாரி ஒருவர் சொன்னார்.

70 வயதுக்கு மேற்பட்ட அல்லது உடல் நலம் குன்றிய கைதிகளுக்கு அந்தச் சலுகை பொருந்தும். சிறைத்துறை, கைதிகளைத் தனிப்பட்ட முறையில் மதிப்பிட்டு அதுபற்றித் தீர்மானிக்கும்.

உடல்நலம் குன்றியிருப்பதாகக் கூறித் திரு. தக்சின் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு எவ்வளவு நாள் சிகிச்சையளிக்கப்பட வேண்டும் என்பது மருத்துவர்களைப் பொறுத்தது என்றும் அதற்கு உச்சவரம்பு ஏதுமில்லை என்றும் சிறைத்துறை அதிகாரி குறிப்பிட்டார்.

-REUTERS

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்