Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

தைப்பூசத்தை வரவேற்கக் காத்திருக்கும் மலேசியர்கள் -மலேசிய அரசாங்கம் அனுமதிக்குமா?

தைப்பூசத்தை வரவேற்கக் காத்திருக்கும் மலேசியர்கள் -மலேசிய அரசாங்கம் அனுமதிக்குமா?

வாசிப்புநேரம் -

மலேசியாவில் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை நடப்பில் இருந்ததால் மலேசிய இந்துக்கள் இந்த ஆண்டுத் தைப்பூசத்தைக் கொண்டாட முடியாமல்போனது.

அதே சூழல் அடுத்த ஆண்டும் தொடருமா எனும் கேள்வி எழுந்துள்ள நிலையில், மலேசியாவில் தைப்பூசக் கொண்டாட்டத்திற்கு அனுமதி கிடைக்கும் என அந்நாட்டு மனிதவள அமைச்சர் சரவணன் தெரிவித்துள்ளார்.

அதனால் மலேசிய இந்துக்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.

நான் பத்துமலைப் பகுதியில் இருக்கிறேன். திருவிழா நடக்கும் இடமாக மட்டும் இல்லாமல் சுற்றுலாத் தலமாகவும் பத்துமலைக் கோயில் இருக்கும். ஆனால் இந்த ஆண்டு அங்காடிக் கடைகள், தண்ணீர்ப் பந்தல்கள், காவடிகள், ஊர்வலங்கள், வெளிநாட்டுச் சுற்றுப் பயணிகள் என எதுவுமே இல்லாமல் இப்பகுதி களையிழந்து காணப்பட்டிருந்தது.


அது அடுத்த ஆண்டும் தொடருமா என நினைத்திருந்தபோது தைப்பூசத்திற்கு அனுமதி கிடைக்கும் என்ற தகவல் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

என சுமித்திரா காளீஸ்வரன் தெரிவித்தார்.

மலேசியாவில் தமிழர்கள் பெரும் ஆவலுடன் அடுத்தாண்டுத் தைப்பூசக் கொண்டாட்டத்தை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

இந்நிலையில், அடுத்த வாரம் நடக்கவிருக்கும் மலேசிய அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பிறகு, தைப்பூசம் தொடர்பான விதிமுறைகள், கட்டுப்பாடுகள் ஆகியவை அறிவிக்கப்படும் என அமைச்சர் சரவணன் நேற்று (டிசம்பர் 12) தெரிவித்தார். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்