ஆசியா செய்தியில் மட்டும்
தைப்பூசத்திற்குத் தயாராகும் பத்துமலை
மலேசியாவில் சிறப்பாக நடைபெறும் திருவிழாக்களில் ஒன்று தைப்பூசம்.
கடந்த ஆண்டு, COVID-19 நோய்ப்பரவல் காரணமாக அது முற்றாகத் தடைசெய்யப்பட்டது.
திருவிழா, இவ்வாண்டு கோலாலம்பூரின் பத்துமலைத் திருத்தலத்தில் கட்டுப்பாடுகளிடையே நடைபெறவிருக்கிறது.
காவடிகளுக்கு அனுமதி இல்லை..
ஆண்டுதோறும் வெளிப்புறத்தில் அமைக்கப்படும் கடைகளுக்குத் தடை..
இந்நிலையில், நேற்றிலிருந்து, பக்தர்கள் தங்களின் நேர்த்திக்கடன்களைச் செலுத்தத் தொடங்கியுள்ளனர்.
நாளை நடைபெறும் தைப்பூசத்தில் ஆயிரக்கணக்கானோர் நேர்த்திக்கடன்களைச் செலுத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் அறியலாம்... காணொளியில்...
(நிருபர்: தாயாளன்)