Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா செய்தியில் மட்டும்

பினாங்கில் விதிமுறைகளோடு தொடங்கியுள்ள தைப்பூசத் திருவிழா

வாசிப்புநேரம் -

மலேசியாவின் பினாங்கு தண்ணீர்மலையில் தைப்பூசத் திருவிழா கட்டுப்பாட்டு விதிமுறைகளுடன் தொடங்கியுள்ளது.  

அரசாங்கம் நிர்ணயித்துள்ள தர செயல்பாட்டு விதிமுறைகளைப் பின்பற்றி, பக்தர்கள் தங்களது நேர்த்திக் கடனைச் செலுத்தி வருவதாக, பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தின் செயலாளர் திரு.சுரேந்திரன் ராமதாஸ் தெரிவித்தார்.

இம்முறை, தைப்பூசத் திருவிழாவில் காவடிகளுக்கு அனுமதியில்லை. பால்குடங்களை ஏந்தி வர மட்டுமே அனுமதி வழங்கப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.  

தண்ணீர்மலை அருள்மிகு ஸ்ரீ பாலதண்டாயுதபாணி ஆலயத்தில் இன்று அதிகாலை 5 மணிவாக்கில் மக்கள் கூட்டம் சற்று அதிகமாக இருந்தது. தற்போது கூட்டம் அவ்வளவாக இல்லை. நாளை தைப்பூசத்தை முன்னிட்டு பினாங்கு மாநிலத்தில் விடுமுறை அனுசரிக்கப்படுவதால், மக்கள் கூட்டம் சற்று அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுவரை எந்தப் பிரச்சினையும் இல்லாமல் தைப்பூசத் திருவிழா திட்டமிட்டபடி சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருப்பதாக அவர் சொன்னார். 

18 வயதுக்குக் கீழுள்ள பிள்ளைகளை அழைத்து வரக்கூடாது என விதிமுறை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இருந்த போதிலும், பெற்றோர் சிலர் பிள்ளைகளை அழைத்து வருகின்றனர். 

அவ்வாறு அழைத்துவந்தால் அவர்கள் உள்ளே அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்பதை பினாங்கு இந்து அறப்பணி வாரியம் மீண்டும் வலியுறுத்த விரும்புகிறது.

என்றார் திரு. சுரேந்திரன்.இந்நிலையில், தைப்பூசத் திருநாளை முன்னிட்டு இன்று காலை ஆறு மணிக்கு  பினாங்கு குவீன் ஸ்ட்ரீட்டிலுள்ள (Queen Street) ஸ்ரீ மகா மாரியம்மன் கோயிலில் இருந்து புறப்பட்ட தங்க ரதம்,  காலை பத்தரை மணி அளவில் தண்ணீர்மலை அருள்மிகு ஸ்ரீ பாலதண்டாயுதபாணி ஆலயத்தைச் சென்றடைந்தது. 

அதுபோல் வெள்ளி ரதம் நாட்டுக்கோட்டை செட்டியார்கள் நிர்வகிக்கும் ஆலயத்தைச் சென்றடைந்தது. 

பினாங்கில் தைப்பூசத் திருவிழா விதிமுறைகளுக்கு உட்பட்டு கொண்டாடப்படுவதை உறுதி செய்ய ஏறக்குறைய காவல் அதிகாரிகளும், வீரர்களுமாகச் சுமார் 1,300 பேர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

விதிமுறைகளை மீறுவோருக்கு அபராதம் விதிக்கப்படும் எனக் காவல்துறை அறிவித்துள்ளது.

(நிருபர்: தனலட்சுமி)

 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்

Aa