Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

கிழக்குச் சீனாவில் கடுமையாக்கப்படும் கட்டுப்பாடுகள்

வாசிப்புநேரம் -

கிழக்குச் சீனாவில் அமைந்துள்ள நகரங்கள் அவற்றின் COVID-19 கட்டுப்பாடுகளை இன்று முதல் கடுமையாக்கியுள்ளன.  

அதிகரித்துவரும் கிருமித்தொற்றுக் குழுமங்களினாலும் சீன அரசாங்கத்தின் முற்றிலும் கோவிட் அற்ற கொள்கையின் காரணமாகவும் கட்டுப்பாடுகள் மீண்டும் நடைமுறைக்கு வந்துள்ளன. 

உணவகங்களில் அமர்ந்து உணவு உண்ண அனுமதி இல்லை.  அதே சமயம், வீட்டிலிருந்து வேலை செய்தல் ஊக்குவிக்கப்படுகிறது. 

தேவையின்றி நகரங்களைவிட்டு வெளியேறவேண்டாம் என்றும் மக்களை  நகர அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர். 

கட்டுப்பாடுகள் மீண்டும் நடப்புக்கு வந்திருப்பது  சீனாவின் பொருளாதார மீட்சியைப் பாதிக்கும் என்று நம்பப்படுகிறது. 

கடந்த வெள்ளிக்கிழமை ஷங்ஹாய் நகரின் கட்டுப்பாடுகள் இரண்டு மாதங்களுக்குப் பின் தளர்த்தப்பட்டன. 

கட்டுப்பாடுகளினால் சீனாவின் தொழிலியல் உற்பத்தி கடந்த ஆண்டின் ஏப்ரல் மாதத்தோடு ஒப்பிடுகையில் இந்த ஆண்டு 2.9 விழுக்காடு குறைந்தது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்