ஜப்பானில் 6.2 ரிக்டர் நிலநடுக்கம்

(கோப்புப் படம்: AP)
ஜப்பானின் தலைநகர் தோக்கியோவை இன்று (26 மே) 6.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் உலுக்கியது.
அதன் தொடர்பில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.
நிலநடுக்கத்தில் காயமடைந்தவர்களைப் பற்றியோ அதில் ஏற்பட்ட சேதத்தைப் பற்றியோ தகவல் உடனடியாக வெளியிடப்படவில்லை.
ஜப்பானிய நேரப்படி மாலை 7 மணிக்குப் பிறகு நிலநடுக்கம் ஏற்பட்டதாக அந்நாட்டின் வானிலை ஆய்வகம் தெரிவித்தது.
பாதிக்கப்பட்ட இடங்களில் ரயில் சேவைகளும் Narita விமான நிலையத்தின் விமானச் சேவைகளும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன.
அங்குள்ள அணுவாயுத நிலையங்களில் வழக்கத்துக்கு மாறாக எதுவும் கண்டறியப்படவில்லை என்று அந்நாட்டின் தேசிய அணுவாயுத அமைப்பு தெரிவித்தது.
-AFP