Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

பெண்களுக்கு மட்டும் நுழைவுத் தேர்வுகளைக் கடுமையாக்கிய மருத்துவக் கல்லூரி

வாசிப்புநேரம் -
பெண்களுக்கு மட்டும் நுழைவுத் தேர்வுகளைக் கடுமையாக்கிய மருத்துவக் கல்லூரி

படம்: AFP

ஆண்களைவிடப் பெண்களின் பேச்சுத் திறன் சிறப்பானதா?

அவ்வாறு கூறி பெண்களுக்கு மட்டும் நுழைவுத் தேர்வுகளைக் கடுமையாக்கியது தோக்கியோவில் உள்ள ஒரு மருத்துவக் கல்லூரி.

ஜுன்டெண்டோ (Juntendo) பல்கலைக்கழகம் பாலின பேதத்தின் தொடர்பில் பாதிக்கப்பட்ட 13 பெண்களுக்கும் இழப்பீடு வழங்கவேண்டும் எனத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

மருத்துவக் கல்லூரியில் சேர்க்கப்படும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையிலான எண்ணிக்கை இடைவெளியைக் குறைப்பதற்காக அவ்வாறு செய்ததாகப் பல்கலை கூறியது.

அந்தச் சம்பவம் 2018ஆம் ஆண்டு நடந்தது.

ஆண்களைவிடப் பெண்களின் பேச்சுத் திறன் சிறப்பானது என்பதால் நேர்காணலில் அவர்களுக்குக் கூடுதல் வாய்ப்பு இருப்பதாகப் பல்கலை கூறியிருந்தது.

தோக்கியோ மருத்துவப் பல்கலையும் வேண்டுமென்றே பெண் விண்ணப்பதாரர்களின் மதிப்பெண்களைக் குறைத்ததை ஒப்புக்கொண்டது.

பெண்கள் எண்ணிக்கையை 30 விழுக்காட்டில் வைத்துக்கொள்வதற்காக அது அவ்வாறு செய்தது.

4 ஆண்டுகளுக்குமுன் அரசாங்கம் நடத்திய விசாரணையில் அது தெரியவந்தது.

பெண்கள் திருமணமாகி பிள்ளை பெற்றுக்கொண்டபின் மருத்துவத் துறையைவிட்டுச் சென்றுவிடுவார்கள் அல்லது குறைவான நேரம் பணிபுரிவார்கள் என்பதால் அவ்வாறு செய்ததாகப் பல்கலை குறிப்பிட்டது.

-AFP

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்

Aa