Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

ஆசிய விளையாட்டு: சீனாவில் தொடங்கியது சுடர் ஓட்டம்

வாசிப்புநேரம் -

COVID-19 நோய்த்தொற்றால் கடந்த ஆண்டு ஒத்திவைக்கப்பட்ட ஆசிய விளையாட்டுக்கான சுடர் ஓட்டத்தைச் சீனா தொடங்கியுள்ளது. ஹாங்சோவ் (Hangzhou) நகரில் அதற்காக  ஆயிரக்கணக்கானோர் திரண்டனர்.

சிறிய தேசியக் கொடிகளைக் கையில் ஏந்தியவாறு அவர்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்ததாக AFP செய்தி நிறுவனம் தெரிவித்தது.

முக்கிய அதிகாரிகள் இருவர் சுடரை ஏற்றி ஓட்டத்தைத் தொடக்கிவைத்தனர்.

கண்கவர் கோயில்கள், கால்வாய்கள், பாலங்கள் ஆகியவற்றுக்குப் பிரசித்தி பெற்ற ஹாங்சோவ் நகரில் இம்மாதம் (செப்டம்பர் 2023) 23ஆம் தேதி ஆசிய விளையாட்டுகள் தொடங்கவுள்ளன.

அந்தப் போட்டி கடந்த ஆண்டு (2022) செப்டம்பர் மாதம் நடந்திருக்க வேண்டும். ஆனால், COVID-19 நோய்த்தொற்றால் அது ஒத்திவைக்கப்பட்டது.

11 நகரங்களைக் கடந்துசெல்லவிருக்கும் சுடர் ஓட்டத்தில் 2,000க்கும் அதிகமானோர் கலந்துகொள்வர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அந்த ஓட்டம் இம்மாதம் 20ஆம் தேதி நிறைவுறும்.

இந்த ஆண்டு ஆசிய விளையாட்டுப் போட்டி மாபெரும் திருவிழாவாகக் களைகட்டவிருக்கிறது.

45 நாடுகள், வட்டாரங்களைச் சேர்ந்த 12,500 விளையாட்டாளர்கள் பங்கேற்கவுள்ளனர்.

ஆதாரம் : AFP

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்