Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

மலேசியாவின் ஆகப்பெரிய அரசியல் கட்சியான அம்னோ இன்று தேர்தல் நடத்துகிறது

வாசிப்புநேரம் -
மலேசியாவின் ஆகப்பெரிய அரசியல் கட்சியான அம்னோ அதன் உச்சமன்றத்துக்கும் இதர பிரிவுகளுக்குமான தேர்தலை இன்று நடத்துகிறது.

கட்சித் தேர்தலில் தலைவர், துணைத் தலைவர் ஆகிய உயர்பதவிகளுக்குப் போட்டி இல்லை.

ஆனாலும் பல பிரபல அரசியல்வாதிகள் கட்சியின் துணைத்தலைவர் பதவிமீது கண்வைத்திருக்கின்றனர்.

இரண்டு வாரங்கள் இடம்பெற்ற காரசாரமான பிரசாரத்தைத் தொடர்ந்து மலேசியாவின் ஆகப்பெரிய அரசியல் கட்சி அதன் உச்சமன்றத்தின் புதிய தலைவர்களை அறிவிக்கவுள்ளது.

அடித்தளத்திலும் மத்திய அளவிலும் முன்னெப்போதும் இல்லாத எண்ணிக்கையில் வேட்பாளர்கள், கட்சியின் தலைமைப் பொறுப்புகளுக்குப் போட்டியிட்டனர்.

அனைவரின் கவனமும் மூன்று துணைத் தலைவர் பொறுப்புகளின்மீது உள்ளது.

இவற்றுக்கு எட்டுப் பேர் போட்டியிடுகின்றனர்.

அம்னோவின் தலைவர் அகமது ஸாஹிட் ஹமிடி (Ahmad Zahid Hamidi), துணைத் தலைவர் முகமது ஹசான் (Mohammad Hassan) இருவரும் தம் பொறுப்புகளைப் போட்டியின்றித் தக்கவைத்துக்கொண்டனர்.

கடந்த ஜனவரியில் நடைபெற்ற கட்சியின் உச்சமன்றக் கூட்டத்தில் திரு ஸாஹிட் ஹமிடியின் ஆதரவாளர்கள், தலைவர், துணைத் தலைவர் பதவிக்குப் போட்டி வேண்டாம் என்ற கருத்தை முன்வைத்திருந்தனர்.

மலேசியாவின் பிரதமர் பொறுப்பேற்றபிறகு திரு அன்வார் இப்ராஹிம் முதல்முறையாக கட்சி உறுப்பினர்களைச் சந்தித்துப் பேசுகிறார்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்