Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

மலேசியாவின் அடுத்த பொதுத் தேர்தலில் எந்த எதிர்க்கட்சியையும் குறைத்து மதிப்பிடப்போவதில்லை: அம்னோ

வாசிப்புநேரம் -

மலேசியாவின் அடுத்த பொதுத் தேர்தலில், எந்த எதிர்க்கட்சியையும் குறைத்து மதிப்பிடப்போவதில்லை என்று அம்னோ கூட்டணி தெரிவித்துள்ளது.

அடுத்த ஜூலைக்குள் மலேசியாவில் பொதுத் தேர்தல் நடந்தாக வேண்டும்.

ஆனால் மற்ற அரசியல் கட்சிகளை ஒழித்துக்கட்ட அமைக்கப்படும் கூட்டணிகள் குறித்து UMNOவின் துணைத் தலைவர் அகமது மஸ்லான் (Ahmad Maslan) எச்சரிக்கை விடுத்தார்.

மலேசியாவின் முன்னாள் பிரதமர் மஹாதீர் முகமது புதிய மலாய்-முஸ்லிம் இயக்கம் ஒன்றை அமைத்து அடுத்த தேர்தலில் போட்டியிடவிருப்பதாகக் கூறியிருந்தார்.

அதைத் தொடர்ந்து கட்சிகள் தங்களது கருத்துகளை முன்வைத்துள்ளன.

மலேசிய எதிர்கட்சித் தலைவர் அன்வார் இப்ராஹிம் (Anwar Ibrahim) அந்தப் புதிய இயக்கத்தைக் குறைகூறியிருக்கிறார்.

நாட்டின் அனைத்து இனங்களையும் உள்ளடக்கும் 'மலேசிய அணுகுமுறை'யை டாக்டர் மஹாதீர்  பயன்படுத்தியிருக்க வேண்டும் என்று  அவர் சொன்னார்.

டாக்டர் மஹாதீரின் Gerakan Tanah Air இயக்கம், அடுத்த தேர்தலில் 120 இடங்களில் போட்டியிடவுள்ளது. அந்த இயக்கத்தில் நான்கு அரசியல் கட்சிகளும் அரசாங்கம் சாரா அமைப்புகளும் கல்வியாளர்களும் தனிநபர்களும் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்