Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

"மக்களின் ஜனநாயாக விருப்பங்களுக்கு மியன்மாரின் அரசாங்கம் இணங்கவேண்டும்!" - ஐக்கிய நாட்டு நிறுவனம்

வாசிப்புநேரம் -
"மக்களின் ஜனநாயாக விருப்பங்களுக்கு மியன்மாரின் அரசாங்கம் இணங்கவேண்டும்!" - ஐக்கிய நாட்டு நிறுவனம்

(கோப்புப் படம்: AFP/STR)

மியன்மாரில் தொடரும் வன்முறைக்கு ஐக்கிய நாட்டு நிறுவனம் கண்டனம் தெரிவித்துள்ளது.

அந்நாட்டின் ராணுவ அரசாங்கம், மக்களின் ஜனநாயக விருப்பங்களுக்கு இடங்கொடுக்கவேண்டும் என்று  அமைப்பு வலியுறுத்தியது.

மியன்மார் ராணுவம், நாட்டின் ஜனநாயக அரசாங்கத்தைக் கவிழ்த்து நாளையோடு ஈராண்டுகள் ஆகின்றன.

முன்னாள் மியன்மார் தலைவர் ஆங் சான் சூச்சி (Aung San Suu Kyi) ஜனநாயக முறையில் நடத்தி வந்த அரசாங்கத்தை 2021ஆம் ஆண்டு பிப்ரவரி முதல் தேதி அந்நாட்டு ராணுவம் கவிழ்த்தது.

மியன்மாரில் தொடரும் நெருக்கடியை ஆராய்வதற்கு ஐக்கிய நாட்டு நிறுவனம் இன்று சிறப்புக் கூட்டத்திற்கு  ஏற்பாடு செய்துள்ளது.

அந்தச் சந்திப்பை நாட்டின் மனித உரிமை மன்றத்தின் சிறப்புப் பிரதிநிதி இணைந்து வழிநடத்துகிறார்.

ஆதாரம் : AGENCIES

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்