Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

வாக்குப்பதிவு இயந்திரங்கள் இடம் மாற்றப்பட்டதாகக் கூறப்படுவதை மறுத்தது இந்தியத் தேர்தல் ஆணையம்

உத்தரப் பிரதேசத்திலும் பீஹாரிலும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் இடம் மாற்றப்படுவதாகப் பரவும் காணொளிகள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன.

வாசிப்புநேரம் -

உத்தரப் பிரதேசத்திலும் பீஹாரிலும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் இடம் மாற்றப்படுவதாகப் பரவும் காணொளிகள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன.

காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியோடு முன்னாள் அதிபர் பிரனாப் முக்கர்ஜியும் இது குறித்து அக்கறை தெரிவித்துள்ளார்.

இந்தியத் தேர்தல் ஆணையம் அது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

ஆனால் ஆணையம் அனைத்துக் குற்றச்சாட்டுகளையும் நிராகரித்துள்ளது. அவை ஆதாரமற்ற, பொய்யான குற்றச்சாட்டுகள் என அது சொன்னது.

தேர்தலில் பயன்படுத்தப்படாத இயந்திரங்களே அறைகளிலிருந்து அகற்றப்பட்டதாக ஆணையம் தெரிவித்தது.

ஒவ்வொரு வாக்குப்பதிவு நிலையத்திலும் வாக்களிப்பு முடிந்தவுடன் மின்னிலக்க இயந்திரம் இருமுறை பூட்டப்பட்டு பின்னர் “Strong Room” என்றழைக்கப்படும் அதிகப் பாதுகாப்புள்ள அறையில் வைக்கப்படும்.

தேர்தல் முடிவுகளை அறிவிக்கும் நாளில் அவை வெளியில் கொண்டுவரப்பட்டு வாக்குகள் எண்ணப்படும்.

தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளின்கீழ், தேர்தல் அதிகாரிகள், வேட்பாளர்கள் எனப் பலரின் முன்னிலையில் அந்தப் பணி நடைபெறும்.

முறைகேடுகளைத் தவிர்க்கும் நோக்கிலேயே தேர்தல் ஆணையம் மின்னிலக்க வாக்களிப்பு இயந்திரங்களுக்கான கட்டுப்பாட்டு அறையை நிறுவியுள்ளது.
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்