Skip to main content
வெற்றுச் சுவர்களுக்கு உயிர்கொடுக்கும் ஓவியத் தம்பதி!
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

ஆசியா exclusive

வெற்றுச் சுவர்களுக்கு உயிர்கொடுக்கும் ஓவியத் தம்பதி!

வாசிப்புநேரம் -
COVID-19 கிருமித்தொற்றுக் காலம் பலரது வாழ்க்கையில் பல்வேறு மாற்றங்களைக் கொண்டுவந்தது என்றே கூறலாம்.

அதே நிலைமை தங்களுக்கும் ஏற்பட்டதாகக் கூறுகின்றனர் மலேசியா கிள்ளான் நகரைச் சேர்ந்த விவாகன் சிவபாரதி தம்பதி.

கிருமித்தொற்றுப் பரவலுக்குமுன் சிங்கப்பூரில் வேலைசெய்து வந்த இவர்கள் பிறகு மலேசியாவுக்குத் திரும்பும் சூழ்நிலை ஏற்பட்டது.

அப்போதுதான் சுவரோவியம் வரையும் வேலையைப் பகுதிநேரமாகச் செய்ய அவர்கள் முடிவுசெய்தனர்.

இந்தியர்களில் மிகச் சிலரே ஈடுபட்டுள்ள இந்தத் தொழிலைக் கடந்த 3 ஆண்டுகளாக இவர்கள் செய்துவருகின்றனர்.

நாள்கள் செல்லச் செல்லத் தொழிலை முழுநேரமாக மாற்றிக்கொண்டனர்.

மலேசியா மட்டும் அல்லாமல் சில சிங்கப்பூரர்கள் வீட்டிலும் இவர்கள் சுவரோவியங்களை வரைந்துள்ளனர்.

மழை, வெயில், உயரமான இடம் எதுவாக இருந்தாலும் வாடிக்கையாளர்கள் கேட்கும் வகையில் சுவரோவியத்தை வரைந்துகொடுக்கின்றனர்.

அவர்களை நேரில் சந்தித்து அனுபவங்களைக் கேட்டது "செய்தி".
ஆதாரம் : Mediacorp Seithi

மேலும் செய்திகள் கட்டுரைகள்