Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

Alibaba நிறுவனர் ஜேக் மா தற்போது எங்கே?

வாசிப்புநேரம் -

Alibaba நிறுவனர் ஜேக் மா (Jack Ma) சுமார் 6 மாதங்களாக ஜப்பானியத் தலைநகர் தோக்கியோவில் வசித்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சீனாவில் தொழில்நுட்பத் துறைமீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டதையடுத்து அவர் பொதுமக்கள் பார்வையில் படவில்லை.

கடந்த 6 மாதங்களாக அவர் தமது குடும்பத்துடன் தோக்கியோவிலும் ஜப்பானின் மற்ற பகுதிகளிலும் வசித்து வருவதாக Financial Times செய்தி நிறுவனம் கூறியது.

அதோடு அவர் அமெரிக்கா, இஸ்ரேல் ஆகிய நாடுகளுக்கும் சென்று வந்ததாக அது குறிப்பிட்டது.

அவர் ஜப்பானிய நவீன கலைப்படைப்புகளை அதிக ஆர்வத்துடன் சேகரித்து வருவதாகப் பிரிட்டனின் செய்தித்தாள் ஒன்று தெரிவித்தது.

அண்மை ஆண்டுகளில் சீன அதிகாரிகள் சந்தேகத்துக்குரிய போட்டித்தன்மைக்கு எதிரான நடைமுறைகளைக் குறிவைத்து நடவடிக்கை எடுக்கின்றனர்.

அதில் சீனாவின் சில பெரிய நிறுவனங்களும் சிக்கின.

-AFP

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்