Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

"தைவானுக்குச் செல்ல அமெரிக்க மக்களவை நாயகருக்கு எல்லா உரிமையும் உண்டு"

வாசிப்புநேரம் -

அமெரிக்க மக்களவை நாயகர் நான்சி பெலோசியின் (Nancy Pelosi) தைவானியப் பயணத்தை வெள்ளை மாளிகை தற்காத்துக் கருத்து வெளியிட்டிருக்கிறது.

அந்தத் தீவுக்குச் செல்ல திருமதி பெலோசிக்கு எல்லா உரிமையும் இருப்பதாக வெள்ளை மாளிகை கூறியது.

சீனா அதைப் பெரிய பிரச்சினையாக மாற்ற காரணமே இல்லை என்று அது குறிப்பிட்டது. 

அந்தப் பயணத்துக்குப் பிறகு அமெரிக்காவுடன் பல முனைகளிலும் ஒத்துழைப்பு தருவதைச் சீனா நிறுத்தியுள்ளது.

சட்டவிரோதக் குடியேறிகளை திருப்பியனுப்புதல், போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகள், ராணுவ உயர் அதிகாரிகளுக்கு இடையிலான பேச்சுவார்த்தை, பருவநிலை கலந்துரையாடல் உள்ளிட்ட அம்சங்களில் ஒத்துழைப்பை நிறுத்தவிருப்பதாகச் சீனா கூறியுள்ளது.

அமெரிக்கா பிரச்சினையைத் தேடவில்லை என்றும் அதற்குப் பிரச்சினை தேவையில்லை என்றும் அமெரிக்கத் தேசியப் பாதுகாப்பு மன்றப் பேச்சாளர்  ஜான் கிர்பி (John Kirby) கூறினார். 

தைவானிய நீரிணையை அணுக்கமாகக் கவனித்துவருவதாகவும் அங்கு செயல்படுவதில் இருந்து அமெரிக்கா ஒதுங்கப் போவதில்லை என்றும் அவர் சொன்னார். 

ஆதாரம் : AGENCIES

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்